2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சூது விளையாடிய நான்கு பேர் கைது

Editorial   / 2017 நவம்பர் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா,சேனைக்காடு மையவாடிக்கு இடைப்பட்ட பகுதியில், பணத்துக்கு சூது விளையாடிய நான்கு பேர் நேற்று(03) இரவு கைது செய்யப்பட்டதாக,திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில், 40, 30, 58 மற்றும் 43 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில், பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து, சுற்றிவலைபை மேற்கொண்டப்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்ததாக,போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் பிணையில் விடுவித்துள்ளதுடன், இவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X