2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

செந்திலின் கூட்டத்தில் பதற்றம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எம்.கீத்

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  ஏற்பாடு செய்த  கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.  
திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம்  ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஞாயிற்றுக்கிழமை (11)   நடத்தப்பட்டது

கூட்டத்திற்கு வருகை தந்த திருகோணமலையைச் சேர்ந்த ஆயுள் கால உறுப்பினர்கள், வர்த்தகள், சமூக நலன்விரும்பிகள், திருக்கோணேஸ்வர கோவிலின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சமீபத்தில் திருடப்பட்ட அம்மன் தாலி பற்றியும் கலந்துரையாடினர். 

திருக்கோணேஸ்வர  கோவில் தொடர்பில் ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுடன் தொடர்புடைய இரு தரப்பினரும் கூட்டத்துக்கு தரப்பினரும் சமூகமளித்திருந்தனர். அங்கு வந்திருந்தவர்களில் பலர், இந்த கூட்டத்தை திசைதிருப்பும் வகையில் கேள்விகளை எழுப்பினர். 

01. நீதிமன்றத்தால் நிர்வாக சபையிடம் கோவிலை கடந்த 2009 ம் ஆண்டு ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை என்றனர். அதற்கு பதிலளித்த ஆளுநர், நகைகள் தொடர்பில் எம்மால் ஒரு தீர்மானத்தை எட்டமுடியாது. தொல்லியல் திணைக்களமே ஆராய்ந்து சான்றழிக்கவேண்டும் என்றார். 

02.  ஆலயம் தொடர்பான   வழக்கொன்று குடியியல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி சட்டத்திற்கு முரணாக அவசர கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை என்ன? என்று வினவப்பட்ட போது, 

இது அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட கோயில் அரசாங்க சட்டப்படடி கோயில் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டபோது, அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்., பகல்கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் இதேபோதே 16 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில், நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். 

இந்நிலையில், கோவிலின் நகைகள் தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்த தரப்பினருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த வாக்குவாதத்தை சமரசம் செய்துவைத்த ஆளுநர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X