Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ஹொரவபொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குளுமிவாக்கட பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு வன இலாகா அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இடையூறுகளை நிறுத்தி தருமாறும் பிரதேச மக்கள் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
ஹொரவபொத்தான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (15) பிரதேச செயலாளர் சுதர்சன திசாநாயக்க தலைமையில் நடைபெற்றபோதே இக்கோரிக்கையினை முன்வைத்தனர்.
கடந்த காலங்களில் குழுமிவாக்கட மக்கள் சேனைப்பயிர்ச் செய்கையை வாழ்வாதார தொழிலாக செய்து வந்ததாகவும், தற்பொழுது வன இலாகா அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான காணி எனவும் தெரிவித்து, பயிர்ச் செய்கை மேற்கொள்ள வேண்டாமெனவும் தெரிவிப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர். ஹொரவபொத்தான பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் பல ஏக்கர் காணிகளில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு மாத்திரம் அரச காணி என குறிப்பிட்டு பயமுறுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
25 வருடத்திற்கும் மேலாக நாங்கள் ஒரே இடத்தில் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வரிப் பணம் செலுத்தி வந்ததாகவும், தற்பொழுது சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தி வருவதை அரசியல் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். ஆனாலும், அண்மைக்காலமாக தங்களுக்கு அதிகளவில் இடையூறுகளை விளைவித்து வருவதாகவும் உடனடியாக சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு ஒரு நபருக்கு இரண்டு ஏக்கர் காணியை யாவது பெற்றுத்தருமாறு பிரதேச மக்கள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதேவேளை, குளுமிவாக்கட மக்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவடையும் வரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025