Freelancer / 2022 ஜூன் 22 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹஸ்பர், அ.அச்சுதன்)
திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல பிரதேச செயலகத்துக்கு முன்பாக காணி சுவீகரிப்பதை நிறுத்தி சொந்த காணிகளை பெற்றுத்தருமாறு இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

யுத்த காலத்தின் போது தங்களது விவசாய காணிகளை இழந்த நிலையில் உள்ள போது தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை அடாத்தாக சுவீகரித்துள்ளனர்.
இதனை தடுத்தி நிறுத்தி சொந்த காணிகளை பெற்றுத் தாருங்கள். இதன் ஊடாக விவசாய செய்கையை மேற்கொள்ளவுள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணியை இழந்த கோமரங்கடவெல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வனஜீவராசி திணைக்களத்தினர் பயிர் செய்கைகளை செய்ய விடாதும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாத வண்ணமும் தடுத்துள்ளனர்.
இதனால் அன்றாட ஜீவனோபாய தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் டி.எம்.எஸ்.திசாநாயக்க கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

22 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
47 minute ago