Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
ஜனாசா விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசு தயக்கம் காட்டுவது ஏன் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்திருப்பது இந்த நாட்டில் சமூகத்தில் பரவலாக ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது. சிறுபான்மை சமூகம் இவர்களுக்கு அரசியல் உரிமைகளை எதிர்காலத்திலும் வழங்கக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “திருத்தங்கள் வருகின்ற போது சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்புப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு மக்கள் பிரதியாக இருந்தாலும் சரி அல்லது மாகாண, உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதியாக இருந்தாலும் நியதிச் சட்டக் கட்டளை தெரிந்திருக்க வேண்டும். 20 பற்றி எந்தவோர் அறிவோ சிந்தனையோ இல்லாமல் ஆதரவாக கையை உயர்த்திய இவர்களுக்கு மக்கள் எதிர்கால அரசியலில் நல்லதொரு பாடத்தைக் கற்பிப்பார்கள்” என்றார்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025