Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும்வரை தமது போராட்டங்கள் தொடருமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் நேற்று (23) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாஸாக்களை அடக்கமுடியுமென நிபுணர் குழுவும் கூறிய பின்பும் அரசு அனுமதி தராதது கண்டனத்துக்குரியது. இதற்கான அனுமதி பெற பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இதற்கான அனுமதியை மறுக்கிறது.
“அதுவும் பாராளுமன்றத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியும் என பிரதமர் கூறிய பின்பும் பிரதமரின் கூற்றைக் கூட பொய்யாக்கும் அரசின் நிலைப்பாடு பிரதமருக்கு மேலே அரசை இயக்கும் இனவாத சக்தி உள்ளது என்பதுக்கு சிறந்த உதாரணம் ஆகும்” என்றார்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025