2025 மே 05, திங்கட்கிழமை

ஞாயிற்றுக்கிழமையில் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஹஸ்பர் ஏ ஹலீம்

நேற்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மதியம் 12 மணிவரை சமயப் பாடசாலைகள் தவிர்ந்த வேறு எவ்விதப் பிரத்தியேக, பாடசாலை வகுப்புகள் பாடசாலைகளிலும் தனியார் நிலையங்களிலும் நடைபெறக்கூடாதென, கிழக்குமாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இவ்வறிவுறுத்தலையும் மீறி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடத்துபவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்தார்.

ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பிரத்தியேக வகுப்பு நடத்துவது உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தூரப் பிரதேசத்துக்கு இடமாற்றம் வழங்குமாறும், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டதுடன், இவ்விடயத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, பொலிஸாரையும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X