2026 மார்ச் 23, திங்கட்கிழமை

டைனமட்டைப் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, மூதூர்க் கடலில் அனுமதியின்றி டைனமட்டைப்; பயன்படுத்தி பிடித்த மீன்களை படி ரக வாகனமொன்றில் ஏற்றிச் சென்ற அவ்வாகனச் சாரதியை இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் பிணையில் விடுத்துள்ள சந்தேக நபரை நாளை செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் பணித்துள்ளார்.

இந்நிலையில், வாகனத்துடனான மீன்களையும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

டைனமட்டைப் பயன்படுத்தி பிடித்த மீன்கள் வாகனமொன்றில் கொண்டு செல்லப்படுதாக தமக்குக்  கிடைத்த தகவலின் அடிப்படையில், அவ்வாகனத்தை மூதூர் பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக வழிமறித்துச் சோதனையிட்டதாகவும் இதன்போது, அவ்வாகனத்தில் டைனமட்டைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .