2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

டீசலுக்குள் மண்ணெண்ணெய்; ஐவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் டீசல் ஏற்றிச்சென்ற பவுசரில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்து கொண்டிருந்த வேளை நேற்றிரவு (23) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கல்மெடியாவ, உல்பொத்த வீதியில் பவுசரொன்றிலிருந்து டீசல் பெறப்பட்டு மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து, அங்கு சென்று சோதனையிட்ட போது, குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

பவுசரின் சாரதியான மெனிக்திவல பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரும், 39 வயதுடைய உதவியாளரும் மேலும் 49, 44, 17 வயதுடையவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பவுசர், திருகோணமலையிலிருந்து கதிர்காமம் பகுதிக்கு டீசல் ஏற்றிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .