2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பகுதியில் டெங்கு நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால் ,டெங்கு தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று, கிண்ணியா தளவைத்தியசாலையில் நேற்று(03) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல்,  கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் டொக்டர் சதீஸ் பவலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ,கிண்ணியா தளவைத்தியசாலையின் டெங்குப் பிரிவின் வார்ட் தொகுதிக்கான உபகரணப் பற்றாக்குறை உட்பட பல்வேறு வகையான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதில்  கிண்ணியா சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.அனீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X