2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தாக்கப்பட்டு இளம்பெண் கொலை

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம், கதிரவன், பதுர்தீன் சியானா

திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கணபதிப்பிள்ளை அஜந்தினி (23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சகோதரியின் கணவர்  இத்தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .