Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
ஜனாதிபதியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தேசிய உணவு செயற்றிட்டம் தொடர்பிலான கூட்டம் நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், பிரதம செயலாளர் அபய குணவர்த்தன மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது,கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும்,இம்மாகாணத்தில் உள்ள 70 வீதத்துக்கும் அதிகமாக விவசாயத்தை ஜீவனோபாயமாக கொண்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பிலும் போசாக்கான உணவு உற்பத்தியினை விரிவடையச் செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டன.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago