2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய கலந்தாலோசனை செயலணியின் மக்கள் சந்திப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

தேசிய கலந்தாலோசனை செயலணியால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மக்கள் சந்திப்பு, மூதூர் பிரதேசத்திலுள்ள திரி சீடி அலுவலக கேட்போர் கூடத்தில் நாளை செவ்வாய்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக, அவ்வமைப்பின் மாவட்ட குழுவினர் தெரிவித்தனர்.

அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம், உண்மை, நீதி மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு, விஷேட நீதிமன்றம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகிய நான்கு பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் தங்களது ஆலோசனை வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்திலும் 26ஆம் திகதி வெருகல் பிரதேச செயலகத்திலும் 28ஆம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆலோசணைகளையும் கருத்துக்களையும் வாய் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் தெரிவிக்க முடியுமென அரசியல் ஆய்வாளர் ஏ.யதீந்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X