2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தேசிய மட்டத்தில் சாதனை

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

முஸ்லிம் கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத்து நபி விழாப் போட்டிகள், கொழும்பு மருதானை பாத்திமா மகளிர் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை 5ஆம் திகதி நடைபெற்றன.

இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தைப்  பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய கிண்ணியா திஃதாருல் உலூம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த முகம்மது நஸிர் முகம்மது ஜெஸ்மித் எனும் மாணவன் கிராஆத் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை பெற்றுள்ளார்.

இவர் கடத்த வருடமும் அல் குர் ஆன் மனனப் போட்டியில் தேசிய மீலாத்து நபி விழா போட்டியில் முதல் இடத்தைப் பெற்றிருந்தார்.

இவர் தரம் 7இல் கல்வி கற்கும் இம்மாணவன் , கடந்த வாரம் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைக்குகிடையில் இடம்பெற்ற மீலாதுன் நபி விழாப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X