2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, பொன் ஆனந்தம்,  எப்.முபாரக்   

கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒரு மில்லியன் ரூபாயினை வீடுகளை அமைப்பதற்கு  வழங்குவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று (01) தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 650 பேருக்கு வீடமைப்பு அதிகார சபையினால் கடனடிப்படையில் காசோலை வழங்கும் நிகழ்வு இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் லந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஷ கூறுகையில்,

“2025ஆம் ஆண்டுக்குள் மாவட்டத்தில்  வீடில்லாத அனைவருக்கும் வீட்டு திட்டங்களை வழங்கி சுபீட்ஷமாக வாழ்வதற்கு வழி செய்து கொடுப்பேன்.

எமக்குள்ளே பல குழப்பவாதிகள் இருக்கின்றார்கள். அக்குழப்பவாதிகளுக்கு பயப்படத்தேவையில்லை” எனவும் தெரிவித்தார்.

“நன்றாக எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எமது வீரதீர படையினர் இந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது. இன்னும் ஒரு யுத்தத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கல்ல. அப்படியானால் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எமது இனங்களக்கிடையில் புரிந்துணர்வு நல்லுறுவு, சமாதானம் நிலவவேண்டும் இனங்களுக்கிடையில் அந்நியோன்ய சகோரத்துவ உணர்வு வேண்டும் .

மதங்களுக்கிடையில்  புரிந்துணர்வு பேதங்களற்ற ஆட்சி முறை நிலவ வேண்டும் அவ்வாறான ஆட்சியைத்தான் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும்.பிரதம மந்திரி தலமையிலான அரசாங்கமும் முன்னெடுக்க முயற்சித்துவருகின்றது.

இந்த ஐந்து ஆண்டுகளில் எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலமையிலான அரசாங்கம் உங்களது காலடிக்கு அபிவிருத்திகளை நீங்கள் நினைக்காத அளவில் கொண்டு வரும் என்பதனை மறந்து விடாதீர்கள். திருகோணமலை மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சனை 2025ஆம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டுவருவோம் என்பதனை உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றோம்.

இந்த ஆண்டில் பத்து மாதிரிக் கிராமத்திட்டம் அமுல் நடாத்தப்பட்டு வருகின்றது. அது இந்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவரப்படும். வரும் ஆண்டில் அது 20  கிராமமமாக மாற்றியமைக்கப்படும் என்பதனை இந்த சமயத்தில் உறுதியளிக்க விரும்புகின்றேன்” எனவும்தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X