Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
தோட்டமொன்றில் தேங்காய்களை திருடுவதற்குச்; சென்ற இளைஞர்கள் இருவரை பொல்லால் தாக்கியும் கத்தியால் வெட்டியும் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தோட்ட உரிமையாளரை எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் சனிக்கிழமை (26) உத்தரவிட்டார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியிலுள்ள தோட்டத்தில் எவருமில்லையென எண்ணிக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (25) தேங்காய்களை திருடுவதற்குச் சென்ற இந்த இளைஞர்கள் இருவரையும் ஒளிந்திருந்த 42 வயதுடைய உரிமையாளர் தாக்கியுள்ளார். இந்நிலையில், சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (25) மாலை கைதுசெய்யப்பட்டார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
50 minute ago