2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘த.தே.கூ 20 ஆசனங்களை பெறும்’

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.கீத்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

 திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த  தேர்தலை விடவும்  வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் எனவும் தமிழ் பேசும் மக்கள்  வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

“தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஆகவே, இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X