2025 மே 19, திங்கட்கிழமை

தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிச்சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், பதுர்தீன் சியானா

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர், திருகோணமலை, கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கன்தளாய்-பியந்த மாவத்தையில் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ் சிங்ஹ (வயது 87) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே, உயிரிழந்தவரின் மகளினால் தந்தை காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குடும்பத்தாருடன் முரண்பட்டுக்கொண்டு இனிமேல் உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன் என்று தந்தை கூறிவிட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதே வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை, நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X