2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தோப்பூரில் அடைமழை

Thipaan   / 2016 நவம்பர் 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் மூன்று நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், பொது மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதனால் சில வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர், பாலத்தோப்பூர், இக்பால்நகர், செல்வநகர் பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலுள்ள 100 கணக்கான பொது மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கிராமங்களில், நீர் வடிந்தோடும் வகையில் ஒழுங்கான முறையில் வடிகான்கள் அமைக்கப்படாமையே இவ்வாறு வீடுகளுக்குள் நீர் புகுவதற்கு பிரதான காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X