2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தோப்பூரில் ஆயுர்வேத மருந்தகம்

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எம்.முபாரக்

திருகோணமலை, தோப்பூரில் ஆயுர்வேத மருந்தகம் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (14) பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிரினால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம், கடந்த வருடம் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, தோப்பூரில் ஆயுர்வேத மருந்தகம் அமைப்பதற்கு 5.5 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க கிழக்கு மாகாண சபை அனுமதியளித்தது.

குறித்த இடத்தை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், கிழக்கு மாகாண சுகாதார பொறியியலாளர் வாசு, கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X