Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியாவில் அறுபதாயிரம் ரூபாய் தாபரிப்புப் பணத்தினை செலுத்தாத நபரொருவரை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராசா, இன்று புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.
கிண்ணியா, மஹ்ரூப்நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் 15,000 ரூபாய் தாபரிப்புப் பணமாக செலுத்தி வந்ததுடன், வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில், முதல் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் செவ்வாய்கிழமை (05) மாலையில் அவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago