2025 மே 19, திங்கட்கிழமை

தாபரிப்புப் பணம் செலுத்தாதவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளுக்கு 23,000ஆம் ரூபாய் தாபரிப்பு பணத்தைச் செலுத்தாத நபர் ஒருவரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று சனிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர், மூதூரைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் 4,600 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில், ஐந்து மாதங்களாக தாபரிப்பு செலுத்தாது இருந்துள்ளார்.

இது தொடர்பில், முன்னாள் மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, வெள்ளிக்கிழமை(19) மாலையில் கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபருக்கெதிராக ஏற்கெனவே, இரண்டு வழக்குகள் மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சந்தேக நபரை, நேற்று சனிக்கிழமை (20) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X