Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மூதூரில் மூன்று பிள்ளைகளுக்கு 70,000 ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாத நபரொருவருக்கு, ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று புதன்கிழமை (24)உத்தரவிட்டார்.
மூதூர்,பாலநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமரைவாக இருந்த நிலையில் மனைவி, மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த நபரைக் கைதுசெய்து மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026