Princiya Dixci / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாயில் பதினொரு மாதங்களாக இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாத ஒருவருக்கு, ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க, நேற்று செவ்வாய்கிழமை (19)உத்தரவிட்டார்.
கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த அப்துல் இஸாக் (வயது 28) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும், மாதாந்தம் 10,000 ரூபாய் செலுத்தி வந்தி நிலையில் பதினொரு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது வேறு ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததையடுத்து அவரது மனைவி வான்எல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை பொலிஸார் திங்கட்கிழமை (18) கைது செய்து கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
6 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago