Sudharshini / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஏழு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்த நபரை, இம்மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஹயான் மீஹககே ஞாயிற்றுக்கிழமை (31)உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த மருக்கண்டி மதியரசு (36)என்பர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் தாபரிப்பு பணம் செலுத்தாமல் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
தனது மூன்று பிள்ளைகளுக்கும் மாதாந்தம் எட்டாயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருப்பதாக, மேற்படி பிள்ளைகளின் தாய்; உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (31) காலை பொலிஸார் கைதுசெய்து, திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026