Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சஹ்ரின் எம்.இஸ்மத்
திருக்கோணேஸ்வரர் கோவில் பரிபாலன சபைத் தலைவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களமானது மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இன்று (25) கோரிக்கை விடுத்துள்ள இந்து அமைப்புகளும் ஏனைய சமூக ஸ்தாபனங்களும், இது இன முறுகலை ஏற்படுத்தும் எனவும்; தெரிவித்தது.
மேற்படி கோவில் வளாகத்தில் காணப்பட்ட 02 மரங்களை சனிக்கிழமை (24) வெட்டித் தறித்த குற்றச்சாட்டின் பேரில் கோவில் பரிபாலன சபைத் தலைவரைக் கைதுசெய்யுமாறு பொலிஸாரிடம் தொல்பொருள் திணைக்களத்தின் திருகோணமலைக் காரியாலய அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் கோவில் பரிபாலனச் சபையினரிடம் கேட்டபோது, '60 வருடங்கள் பழமை வாய்ந்த அன்னதான மடத்தைப் புதுப்பித்துக் கட்டவுள்ளதாகவும் இதற்காக அங்குள்ள 02 வேப்பமரங்களை அப்புறப்படுத்துவதற்கு அனுமதியளிக்குமாறும் தொல்பொருள் திணைக்களத்திடம் 2013ஆம் ஆண்டு கோரியிருந்தோம். அனுமதி தரப்படவில்லை.
ஆனால், இவ்வருட நடுப்பகுதியில் மடத்தைத் திருத்துவதற்கு மாத்திரம் அவர்கள்; அனுமதியளித்தனர். இந்த அனுமதியின் பின் மடத்தைத் திருத்துதற்காக ஒப்பந்தக்காரர்களிடம் கையளித்தோம். மடத்தின் மேல் ஆலமரக் கிளைகள் காணப்படுவதுடன், 02 வேப்பமரங்கள் அன்னதான மடச்; சுவர்களை ஊடறுத்து நின்றன. சுவரைப் பாதுகாக்கும் நோக்கில் வேப்பமரங்களை ஒப்பந்தக்காரர்கள் தறித்துள்ளனர்.
இது சுற்றுச்சூழல் சட்டத்துக்கு முரணானது என்ற குற்றச்சாட்டின் பேரில் கோவில் பரிபாலன சபைத் தலைவரைக் கைதுசெய்யுமாறே பொலிஸில் தொல்பொருள் திணைக்களம் முறைப்பாடு செய்துள்ளது' என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025