2025 மே 19, திங்கட்கிழமை

திருகோணமலை நகரைத் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுப் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை (19) முன்னெடுத்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் சந்திரகுமாரவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இவ்வேலைத்திட்டத்தில், நகரப் பகுதி 13 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது.

'திருகோணமலை நகருக்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணமாக இருக்கின்றார்கள். நகர்புறம் பெரிதும் அசுத்தமான நிலையில் உள்ளது. கடற்கரை ஓரங்கள் கழிவுகளால் நிறைந்து காணப்படுகின்றது. இது, திருகோணமலை நகரம் எவ்வாறிருக்கும் என்று அவர்கள் கொண்ட எண்ணத்தை மாற்றுவதாக உள்ளது.

மேலும் பல வெளிநாட்டு பயணிகளை கவர்வதற்காகவும் நகரத்தில் உள்ளவர்கள் நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடவும் இவ்வாறான  வேலைத ;திட்டங்கள் வழிவகுக்கும்' என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது தெரிவித்தார்.

கிராம சேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள், நகர சபை ஊழியர்கள், நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், பொது மக்கள் என, பலரும் இவ்வேலைத்திட்டத்தில் பங்கெடுத்தனர்.  

ஆரம்ப நிகழ்வு, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண காணி வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெராரா மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, பட்டணமும் சூழலம்  பிரதேச செயலாளர் எஸ்.அரள்ராஜ், நகர சபை வேலைகள் அத்தியட்சகர் எஸ்.கிரிந்திரன், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ஜோ.அன்ரன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

நகரத்தை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உட்துறைமுக வீதி கடற்கரை, கோணேஸ்வரர் ஆலய கடற்கரை, ஒல்லாந்தர் குடா கடற்கரை என்பன தூய்மைப்படுத்தப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதான வீதி, மத்திய வீதி, ஏகாம்பரம் வீதி, திருஞானசம்பந்தர் வீதி, தபால் நிலைய வீதி, நீதிமன்ற வீதி, என்பனவற்றில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டதுடன் வடிகான்களில் நீர் வழிந்தோடத்தக்க விதமாக துப்புரவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு பிரிவிலும் பொருத்தமான இடங்களில் நடுவதற்காக தலா 2 மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அதிதிகளால் தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X