2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை நகரத்தில் வாகனச் சோதனை

Thipaan   / 2016 ஜூன் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை நகரத்தில், வாகனங்களின் புகைப் பரிசோதனை மற்றும் பாவனை தொடர்பான சோதனைகளை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் திருகோணமலை தலைமையக பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டதாக அத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (21) காலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில், அதிகளவில் கெப் வாகனங்கள், லொறிகள் சோதனையிடப்பட்டன.

வாகனங்களில் புதிதாக இணைக்கப்பட்ட பாகங்கள் தொடர்பாக சோதனையிட்டதாகவும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, கம்பனிகளால் தயாரிக்கப்பட்டதை விடவும் முச்சக்கர வண்டிகளில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கின்ற பாகங்களை அகற்றி விட்டு, வாகனத்தை போக்குவரத்து பொலிஸாருக்குக் காண்பிக்குமாறும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி அறிவுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X