Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மது ஒழிப்புக்கான வேலைத்திட்டம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், கிராம மட்டங்களிலான அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும்போது, மாகாண சபைகளையும் இணைத்துக்கொண்டு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற யோசனையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முன்வைத்தார். இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உறுதியளித்தார்.
அத்துடன், வெளிமாவட்ட மீனவர்களின் வருகையை நிறுத்துமாறு மீனவர்கள் இதன்போது கூறினர்.

9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago