2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் டிப்ளோமா பயிற்சி நெறி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் ஏ.பரீத், எஸ்.சசிக்குமார், பதுர்தீன் சியானா

திருகோணமலை  மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறிக்கான அங்குராப்பண வைபவம், திருகோணமலை ரோட்டரிக் கழகக் கேட்போர் கூடத்தில், நேற்று (20) மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது.

மூதூர் ,திருகோணமலை ஆகிய பிரதேசங்களில், 80 ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி நடத்தப்படவுள்ளது.

திருகோணமலை ரோட்டரிக் கழக  நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் ச. சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ விருந்தினராக முன்னாள் ஆளுநர் தர்சன் ஜோன், கிழக்கு மாகாண முன் பள்ளி அமையப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம், திருகோணமலை முன் பள்ளி இயக்குனர் ச. வரதசீலன் மற்றும்முன் பள்ளி அமைய வளவாளர்களும், கலந்து கொண்டார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .