2025 மே 17, சனிக்கிழமை

திருகோணமலையில் மழையின்றி 42 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தற்போது மழை இன்மையால் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருகோணமலையில் 38 ஆயிரம் ஏக்கர்; பெரும்போக நெற்செய்கை கருகியுள்ளதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.குகதாஸன் தெரிவித்தார்.

இந்த வருடம்  திருகோணமலையில் 12 ஆயிரம் ஹெக்ரேயரில்; மானாவாரி நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்; 29,000 ஏக்கர் நெற்செய்கை கருகியுள்ளது.

மேலும், சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட  9 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையும்  கருகியுள்ளது.

இதேவேளை, 4,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட உப உணவுகளான சோளம், நிலக்கடலை என்பனவும் அழிவடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

குச்சவெளி, கிண்ணியா, வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை ஏற்கெனவே கருகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .