Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாணக் கல்விக் குழுவினர், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் தமது குழு ஆய்வு நடவடிக்கைகளில், இன்று செவ்வாய்க்கிழமை (07) ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர், திருகோணமலை வடக்கு வலயக்கல்விப் பணிமனைக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே இக்கலந்தாய்வுகளில் ஈடுபட்டனர்.
வலயமட்டத்தில் காணப்படும் கல்வி நிர்வாக மற்றும் நிதிசார் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு, கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையிலான அமைச்சு மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகள் அடங்கலான குழுவினர், அண்மைக்காலமாக ஒன்றைவிட்டு ஒரு வாரம், வலயக்கல்வி பணிமனையொன்றுக்கு விஜயம் செய்து, வலய மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்து வருகின்றனர்.
இத்திட்டத்துக்கிணங்க, திருகோணமலை வடக்கு வலயத்துக்;குரிய விஜயத்தைத் தாம்
மேற்கொண்டதாக, கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர் குழுவினர் கோமரங்கடவல பிரதேசத்தில் உள்ள இவ்வலயததுக்கு விஜயத்தை மேற்கொண்டு, வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருடன் அங்கு காணப்படும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இக்குழுவில் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

25 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago