Princiya Dixci / 2016 மே 10 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இரவு வேளைகளில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நபரொருவரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க, திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார்.
கந்தளாய் பிரதேசத்தில் நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் இரும்புகளைத் திருடி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .