2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு சந்தேகநபருக்கு ஆறு மாத கட்டாயச் சிறை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் பல திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட சந்தேகநபரொருவருக்கு, 06 மாதங்கள் கட்டியச் சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை (06) உத்தரவிட்டார். 

கந்தளாய் வான்எலப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கந்தளாய் பிரதேசத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை, நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் இரும்புகள் ஆகியவற்றைத் திருடி விற்பனை செய்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நபருக்கெதிராக பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு  நடைபெற்று வந்த வழக்குகளின் போது குறித்த நபரைக் குற்றவாளியாக இனங்கண்டு ஆறு மாதங்கள் கட்டாயச் சிறைதண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .