2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தவருக்குப் பிணை

Thipaan   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்திருந்த நபரொருவரை, இரு சரீரப் பிணைகளில் செல்ல கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க பெரேரா, நேற்றுத் திங்கட்கிழமை(13) உத்தரவிட்டார்.

கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்திய நிலையிலே, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில், நேற்று திங்கட்கிழமை (13) ஆஜர்படுத்திய போதே பிணையில் விடுதலை செய்தார்.

மோட்டார் சைக்கிளைத் திருடி விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் ஏற்கெனவே சிறையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X