2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்றவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற நபரொருவருக்கு, 7,500 ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (31) உத்தரவிட்டார்.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைதண்டனை விதித்துத் நீதவான் உத்தரவிட்டார்.

மேன்காமம், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரெருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், அதிக மின்வலு கொண்ட பிரதான மின்கம்பியில் இருந்து தனது வீட்டுக்கு மின் கம்பத்தின் ஓரத்தில் தெரியாதவாறு திருட்டு மின்சாரம் பெற்றிருந்த நிலையிலே, மூதூர் மின் பாவனைகள் அலுவலகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸாரின் உதவியுடன் நேற்றுக்காலையில் கைதுசெய்யப்பட்டாரென, மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X