2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

திருமலைக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் கிரியெல்ல

Thipaan   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை கோணேசபுரியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி மாணவர் விடுதி, நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வைபவரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக, திருகோணமலை வளாக முதல்வர்
வி. கனகசிங்கம்தெரிவித்தார்

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.  

நாடுபூராவும் உள்ள பல்கலைக்கழகங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  இவ்வாறான விடுதிகள் அமைக்கும் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்விடுதியுடன், தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையமொன்றும் திறந்துவைக்கப்படவுள்ளதுடன், இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ரி.ஜெயசிங்கமும் கலந்துகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .