2025 மே 17, சனிக்கிழமை

துறையடியில் புத்தர் சிலை வைக்க முயற்சி

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை - கிண்ணியா - துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிட நிர்மாணப் பணிகள்  தற்போது துரிதமாக  முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் முஸ்லிம்கள் பெரிதும் அச்ச நிலைக்குள்ளாகியிருக்கின்றர்.

ஒரு சில பௌத்த  குடும்பங்கள் கிண்ணியா  துறையடியில் வசிக்கும் நிலையில், இங்கு புத்த சிலை வைப்பதனூடாக முஸ்லிம்களின் பூர்வீகத்தை அவர்கள் முற்றாக சுரண்டுவதோடு  நில உரிமையும் முழுமையாக பறிபோகின்றது எனவும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .