2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தொல்பொருள் என்ற போர்வையில் காணிகள் சுவீகரிப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

'தொல்பொருள் என்ற பெயரைப் பயன்படுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை, தற்போது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. தொல்பொருள்துறை, கல்வி அமைச்சுக்குள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' எனத் தமிழத்; தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு, வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியிலன்; இறுதிநாள் நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,
 
 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மதுபானசாலைகள் இருக்க வேண்டும். ஆனால், மூன்று மடங்கு மதுபானசாலைகள் காணப்படுகின்றன. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், 11 மதுபானசாலைகள் அதிகரித்துள்ளன. இதனால், எமது மக்கள் உழைக்கும் பணம் அங்கு செலவிடப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் மதுபாவனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாங்கள் வறுமையின் உச்ச கட்டத்தில் காணப்படுகின்றறோம்.
 
வாழைச்சேனைப் பகுதியில் வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போது கேரளா கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இவ்விடயத்தை ஒரு மாணவனுக்கூடாக நான் அறிந்துகொண்டேன்.  மாணவர்கள்,  மரண வீடுகளில் மது அருந்துகிறார்கள். இதனை நான் நேரடியாக பார்க்ககூடியதாகவிருந்தது. இந்த விடயத்தில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 759 தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் இருப்பதாகவும் தற்போது 23 இடங்கள் மாத்திரம் பாதுகாக்கப்படுவதாகவும் ஏனைய இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கையெடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
 
தொல்பொருள் என்ற ரீதியில், எமது பகுதிகள் சுரண்டப்படவுள்ளன. இந்த விடயத்தில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.  கல்வி தொடர்பான தொல்பொருட் இடங்களை பாதுகாக்கப்பதைத் தவறிவிட்டு,  மக்களின் வாழ்விடங்களை,  தொல்பொருள் பிரதேசம் என்ற அடையாளத்துவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
 
கிழக்குப் பல்கலைக்கழகமானது, மாகாணத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் இனங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், அப்பல்கலைக்கழகத்தில் கலைபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களில் 80 சதவீதத்துக்கு மேல் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எமது மாணவர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் தென்பகுதி மாணவர்களின் கல்விக்கூடமாக மாறியுள்ளது.
 
எமது மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தாது ஏனைய பல்கலைக்கழகங்களை முன்னிலைப்படுத்துவதால் பல்லைக்கழக அனுமதி வேறு பிரதேங்களில் கிடைக்கிறது.
கலைத்துறை தமிழ்மொழில் உள்ளதன் காரணமாகவே, தமிழ் பேசும் மாணவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கலைத்துறை ஆங்கிலத்துக்கு மாற்றப்படுமாயின், சகல பீடங்களிலும், சிங்கள மாணவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும்.
 
மாணவர்கள், கலைத்துறையைத் தெரிவு செய்வதை தவிர்த்து, கணித விஞ்ஞான துறையில் ஆர்வம் காட்டவேண்டும். நீங்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டால், உங்களது கல்வியை முடிக்கும் வரை உதவிகளை வழங்க தாயாராக உள்ளோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X