2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தடை செய்யப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடித்தவர்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

தடைசெய்யப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா சனிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய இரண்டு மீனவர்களே இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட கடற்படையினரின் பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில், மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போதே, நீதவான் மேற்படி உத்தரவரை பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .