Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில்; முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இக்கூட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகத்தின் கலந்துரையாடல் மண்டபத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் மீன் வளத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்கும் முகமாக பலமுறை வரர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்ட இரண்டரை இஞ்சிக்கும் குறைவான கண்ணுடைய வலைகளை மீனவர்கள் பாவிப்பதற்கான அனுமதியை மாகாண சபை உறுப்பினரின் முன்வைப்பின் அடிப்படையில் இணைத்தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும், இந்த அனுமதி கோரல் சட்டத்துக்கு முரணானது எனவும் இதனால் ஏற்படப்போகும் தீமைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் அவ்வலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என தெரிவித்தார்.
இருந்தும், இவ்வாறான இரண்டரை மற்றும் ஒன்றரை இஞ்சி கண்ணுடைய வலைகளுக்கும் அனுமதி வழங்க கோரி 06 அரசியல்வாதிகளின் ஒருமித்த கோரி;க்கைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன தனது எதிர்ப்பை தெரிவித்து அது ஒருங்கிணைப்புக்குழு கூட்ட அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்படவுள்ளதாவும் அறிவித்துள்ளனர்.
மேலும் இம்மாதம் 21ஆம் திகதியுடன் திருகோணமலையில் இரண்டரை இஞ்சிக்கு குறைவான கண்ணுடைய மீன்பிடி வலைகளை பயன்படுத்த மத்திய மீன்பிடி அமைச்சரால் வழங்கப்பட்டிருந்த அனுமதி நிறைவடைந்து தடை அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இவ்வாறான ஒரு அனுமதியை குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோரியுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026