2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழரசு கட்சியின் மக்கள் செல்வாக்கை கண்டு ஜனாதிபதி அச்சம்

Freelancer   / 2023 மார்ச் 01 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

திருகோணமலையில் நேற்று செவ்வாய்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துகளை பகிர்ந்தார்.

குறிப்பாக, தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதையும், வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

இதன்காரணமாக பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .