Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், எப்.முபாரக்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை நடத்தும் பொங்கல் விழா, திருகோணமலை நகரசபை மண்டபத்தில், எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமை அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர மேயர் க.சரவணபவன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவின் தொன்மை, சிறப்பு, அதன் எதிர்காலம் பற்றிய ஆய்வுரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago