2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கவும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முகமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டு வருகின்ற பிளவைத் தடுத்து, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகளும், புத்திஜீவிகளும் ஈடுபட வேண்டுமென, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ் மக்களை அரசியல், பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தி, அவர்களுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் பிரிந்து செயற்படுவது தற்போதைய சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது” என்றார்.

இன்றைய நிலையில் நாம் பேரம்பேச முடியாத சக்தியாக மாறியுள்ளதாகக் கூறிய அவர், “இது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத பல்வேறுவகையான பின் விளைவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை” எனவும் தெரிவித்தார்.

“காலங்காலமாக எமக்குள் ஏற்பட்டு வருகின்ற பிளவே இன்றுவரை எமக்கான ஒரு தீர்வை எட்டுவதற்கு பாதகமாக அமைந்து வருகின்றமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அரசியல் விடையத்திலாவது ஓரணியாக ஒன்றுபட்டு இயங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இக்கட்சிகளை ஒன்றாக்கி, ஓரணியில் பயணிக்க வைக்க வேண்டிய பொறுப்பு தற்போது புத்திஜீவிகளினதும் புலம்பெயர் அமைப்புகளினதும் கைகளிலேயே தங்கியுள்ளது” எனக் கூறிய அவர், தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை, புலம்பெயர் அமைப்புகளும் புத்திஜீவிகளும் வழங்கி, தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சிகளை வழிநடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .