Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் குஞ்சடப்பன் திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவம், இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பகுதியில் இருந்து கிண்ணியா வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் வெள்ளை மணல் பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார் என்பதுடன், மற்றொருவர் தம்பலகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
முகம்மது சித்தீக்- பாஹீம் அக்ரம், (வயது 21) முகம்மது நளம் - நவீத் இலாஹி (வயது 20) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலமும், தம்பலகாமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணையை, தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago