2026 மார்ச் 23, திங்கட்கிழமை

தலைக்கவசம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதுடன் தலைக்கவசம் இன்றிச் சென்ற குற்றத்துக்காக 10, 000 ரூபாயைத் தண்டமாகச் செலுத்துமாறு திருகோணமலை மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த ஈ.ஆர்.எச்.டப்ளியூ. ரஞ்சித் ராஜபக்ஷ (32) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மொறவௌப் பிரதேசத்திலிருந்து மது அருந்தி விட்டு தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருத்த போதே இவரைக் கைதுசெய்துள்ளதாக மொரவௌப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பிறிதொரு வழக்கில் கடந்த 2015-09-15ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மகாதிவுள்வௌ பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண்ணொருவருக்கு  வைத்திய செலவுக்காக 20,000 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் மொறவௌப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .