2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தலைமைகளை மிரட்டிய ஆசிரியருக்கு எதிராக வழக்கு

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிக முக்கியமான அரச நிறுவனங்களின் தலைமைகள் மூவருக்கு எதிராகவும் அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொலைபேசியூடாக அவதுாறு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆவிரியர் ஒருவருக்கு எதிராக, மூதுார் பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான முறைப்பாட்டை குறித்த நிறுவனங்களில் ஒன்றான வங்கியொன்றின் தலைமையதிகாரி, கடந்த 27.12.2016 அன்று மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதுதொடர்பான விசாரணைகள மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இவ்விடயமாக பாதிக்கப்பட்டதாக கருதப்படும் ஏனைய இரண்டு அரச நிறுவனங்களில் தலைமைகளும் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

மேற்படி மூன்று தலைமைகளுக்கு எதிராக  தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் பெண்ஆசிரியையுடன் தொடர்புபடுத்தி குறித்த சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்ததுடன், தவறான அவதூறான கருத்துகளையும் பரப்பி வந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மூதுார் நகரப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரையும் அவரைத் தொடரந்து கிண்ணியாப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இறுதியாக கடந்த 25ஆம் திகதி, மூதூர் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நேரடியாக  விசாரித்தபோது, இரண்டாவது சந்தேகநபரான  கிண்ணியாவைச் சேர்ந்த ஆசிரியர் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X