2025 மே 14, புதன்கிழமை

தலைமறைவாக இருந்தவர் கைது

எப். முபாரக்   / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுக் குற்றச்சாட்டு வழக்கொன்றின் சந்தேக நபர், மூன்று வழக்குத் தவணைகளுக்குச் செல்லாது தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது, கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றை உடைத்து கொள்ளையிட்டமை, இரும்புகள் திருடியமை போன்ற வழக்குகள், கந்தளாய் நீதிமன்றில் நிலுவையிலுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X