தீஷான் அஹமட் / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, குறித்த நீதிமன்ற வழக்குகளுக்கு சமுகமளிக்காது தலைமறைவாக இருந்த இருவரை, சம்பூர் பொலிஸார், இன்று (09) கைது செய்தனர்.
சம்பூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், சண்டையிட்ட விவகாரம் தொடர்பாகவும் சேனையூர் பகுதியைச் சேர்ந்த மற்றைய நபர், கசிப்புக் காய்ச்சிய குற்றச்சாட்டின் பேரிலும் மூதூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காது தலைமறைவாக இருந்த குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், சம்பூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago