2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தளபாடங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்

தோப்பூர், நூரிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய நிர்வாகக் கட்டடமும், தளபாடங்கள் கையளிக்கும் வைபவமும், இன்று (06) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் வட்டாரக் குழுத் தலைவர் முஜாஹித் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், துறைமுகங்கள் கப்பற்றுறை முன்னாள் பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாய் செலவில் நிர்வாக அலுவலகமும் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .